அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கான 25 வீடுகள் மழையால் சேதம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கான 25 வீடுகள் மழையால் சேதம்

கடும் மழையுடன் காற்று வீசியதால் அரநாயக்க அம்பதெனியவத்த பகுதியில் 25 வீடுகள் சேதத்துக்குள்ளாகியுள்ளன. கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தால் 7 வீடுகள் பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளன. அரநாயக்க சாமசரகந்த பகுதியில் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டு வரும் வீடுகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம், சனிக்கிழமை (03) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தால் இவ்வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன் பல வீடுகளின் அஸ்பஸ்டஸ் கூரைத்தகடுகளும், தகரங்களும் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளன.

இவ்விடயம் இடர் முகாமைத்துவ அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரதேச கிராம சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment