அலரி மாளிகைக்கு முன்னால் கொழும்பு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

அலரி மாளிகைக்கு முன்னால் கொழும்பு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

கண்டி, திகனயில் ஆரம்பித்து மத்திய மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு வன்முறை பரவி வரும் நிலையில் சட்ட, ஒழுங்கை நிலை நாட்டும்படி கோரி பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கொழும்பிலுள்ள அலரி மாளிகைக்கு முன்னாள் தற்போது முஸ்லிம்கள் ஒன்று கூடி வருகின்றனர்.
கொல்லுப்பிட்டி பள்ளிவாசலில் இது தொடர்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் ஏற்பாடாகியுள்ள நிலையில் சமூக ஆர்வலர்கள் அப்பிரதேசத்துக்க வந்து சேர்ந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரம் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் மத்திய மாகாணத்தின் பல இடங்களில் அச்ச சூழ்நிலை நிலவி வருகின்றமையும், நான்கு பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பன சேதப்படுத்தப்பட்டு எரியூட்டப்பட்டுடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment