எந்தவொரு மாணவருக்கும் பலமைப்பரிசில் சலுகை மறுக்கப்பட மாட்டாது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

எந்தவொரு மாணவருக்கும் பலமைப்பரிசில் சலுகை மறுக்கப்பட மாட்டாது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

மஹாபொல அல்லது ஏனைய புலமைப்பரிசில் நிதியுதவிக்கு உரித்தான எந்தவொரு மாணவருக்கும் இந்த சலுகை மறுக்கப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா தெரிவிக்கையில் 

கடந்த இரண்டு மாதங்களில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்த பீடங்களில் உள்ள மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு இந்த மாதத்தில் வழங்கப்படும்.

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலப்பகுதிக்குள் ஏனைய பீடங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment