மொனறாகலை புத்தளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 48ஆவது மாதிரிக்கிராமம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
அடிப்படை வசதிகள் மற்றும் உள்ளக வீதிகளைக்கொண்டதாக இந்த கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வரும் மாதிரிக்கிராமங்களின் எண்ணிக்கை 500 ஆகும்.
மேலும் 50 கிராமங்கள் எதிர்வரும் சில வாரங்களில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவிருப்பதாக வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்தார்.
No comments:
Post a Comment