சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம விற்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (02) மட்டக்களப்பில் நடை பெற்றது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு, பாசிக்குடா, கல்குடாவைச்சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது வன விலங்குகள் குறிப்பாக முதலைகளால் உள்ளாசப்பிரயாணிகளுக்கு ஏற்பபட்டுள்ள அச்சுறுத்தல், ஹோட்டல் பணியாளர்களுக்கான பயிற்சி வழங்குதல், கிழக்கு மாகாண உல்லாச பிரயாணம் தொடர்பான உட்கட்டமைப்பு போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கருத்து தெரிவிக்கையில்,
உயர் தரமான உல்லாசப்பிரயாணத்துறை கட்டுமானங்களை உருவாக்குதல் தொடர்பாக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பிரதான தொழிற்துறையாக உல்லாச பிரயாணத்துறையை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண சபை உரிய நடவடிக்கையினை எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் சாலித்த விஐயசுந்தர என பலரும் கலந்து கொண்டனர்.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment