பிணைமுறி விவகாரத்தில் அர்ஜுன் அலோஷியஸ், கசுன் பலிசேன கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, February 4, 2018

பிணைமுறி விவகாரத்தில் அர்ஜுன் அலோஷியஸ், கசுன் பலிசேன கைது

பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியல் மற்றும் அதன் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி இருவரது வீடுகளுக்கும் இன்று (4) காலை சென்றிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைக் கைது செய்ததாகத் தெரியவருகிறது.

பிணைமுறி விவகாரத்தில் அர்ஜுன் அலோஷியஸ், அர்ஜுன மகேந்திரன் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை சந்தேக நபர்களாக நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment