கம்பஹா, உடுகம்பொல பகுதியில் பலகை வர்த்தகரான ‘நெவில் முதலாளி’ என அறியப்படும் கே.நெவில் என்பவர், நேற்று (6) அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
காலை 8.30 மணியளவில் அவர் தனது மூத்த மகனுடன் தனது வீட்டின் முன்னால் இருந்தவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதோர் அவரைச் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மண் வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்ட போட்டியொன்றே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment