தேர்தல் அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு உள்ளூராட்சி மன்றமாக கல்முனை மாநகர சபையும் அதிலும் குறிப்பாக சாய்ந்தமருது நகரும் இருந்து வருகிறது. காரணம் தொடர்ந்து மு.கா வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த சாய்ந்தமருது இம்முறை பறிபோய்விடும் என்ற எதிர்பார்ப்பேயாகும்.
மு.கா தலைவர் சாய்ந்தமருதுக்கு வருவாரா ? கூட்டம் போடுவாரா? என்ற கேள்விகளுக்கு விடையாக சாய்ந்தமருது மக்களின் பங்குபற்றுதலோடு இன்று வெற்றிகரமான எழுச்சி மாநாடொன்றை சாய்ந்தமருதில் பட்டப்பகலில் நடாத்திக் காட்டியிருக்கிறது மு.கா.
அல்ஹம்துலில்லாஹ்.
சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையும் போராட்டமும் நியாயமானதாக இருந்த போதிலும் அதிலே சில கறுப்பாடுகளும் இருப்பதனை அவதானிக்க முடிகிறது. சுயேட்சைக்குழு முழுக்க முழுக்க பள்ளிவாசல் சார்ந்தது என்று சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் சாய்ந்தமருதில் மு.கா மற்றும் பள்ளிவாயல் தரப்புகளை தவிர்த்து மற்றுமொரு குழு இந்த குழப்பங்களுக்கு பின்னால் திரை மறைவில் இருந்து கொண்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதனை இன்றைய பின்வரும் சம்பவம் தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளது.
‘முழு ஊரும் எம்மோடு தான் இருக்கிறது. எவரது வருகையாலும் எமக்கு எந்த பிரச்சினை இல்லை. எனவே யாரும் வீணான பிரச்சினைகளை தோற்றுவிக்காது அமைதியை கடைப்பிடிக்கவும்’ என்ற பள்ளிவாசலின் இன்றைய அறிவுறுத்தலை மதிக்காது ஊரின் பிரதான வீதிகளில் அநாகரிமாக நடந்து கொண்ட சிலரே இதற்கு எடுத்துக் காட்டாகும்.
உண்மையில் சுயேட்சைக் குழுவானது, பள்ளிவாசலின் வழிகாட்டலிலே இயங்கும் பொதுஜன அபிப்பிராயமாக இருக்குமேயானால் பள்ளி வாசலினால் ஏன் இன்று மக்களை அடக்க முடியாமல் போனது ?
அல்லது பள்ளி வாசலையும் தாண்டி மக்களை தவறான வழியில் நடாத்தியது யார்? என்ற கேள்விகள் எழுதவது இயல்பானதே…
இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் பொதுமக்களுமல்ல; பள்ளிவாசலினால் அனுப்பப்பட்ட குழுவுமல்ல.
மாறாக வன்னி அமைச்சரின் சில அடிவருடிகள் இதன் பின்னணியில் இருந்து கொண்டு எரிகிற நெருப்பில் எண்ணைய் ஊற்றி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை வெளிப்படுகிறது.
இவர்களின் இந்த அநாகரிகமான செயல்களினால் இஸ்லாமிய விழுமியங்களை தாங்கி நிற்கும் முழு மருதூருமே இன்று வெட்கித் தலை குனிய வேண்டியேற்பட்டுள்ளது.
வெளியூர் வாகனங்கள் வந்து போகின்ற ஊரின் பிரதான பாதைகளில் நின்று கொண்டு அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களை கூறி, அநாகரிகமாக நடந்து கொண்ட இதே முகங்களைத்தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மருதூரில் நடைபெற்ற வீதி மறிப்பு போராட்டத்திலும் முன்னின்று செயற்பட்டிருந்ததனை அவதானிக்க முடிந்தது.
சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் தெரிவிலிருந்தே இந்த முயற்சிகளின் பின்னணியில் வன்னி அமைச்சரது ஆட்களின் தலையீடு இருப்பதை சுட்டிக்காட்டி வந்திருந்த போதிலும் எம்மில் பெரும்பாலானோர் சிந்திக்க மறுத்து விட்டோம்.
இவ்வாறு எல்லா நாடகங்களையும் நடத்தி விட்டு, எதுவுமே தெரியாதது போன்று இருக்கும் வன்னி அமைச்சர் இறைவனிடம் இதற்கு பதில் கூறியாக வேண்டும்.
ஏ.டபிள்யூ.எம். ஹிஷாம்
சம்மாந்துறை.
No comments:
Post a Comment