வியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பா முழுவதும் ஐஸ்கட்டியால் ஆனது. இங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியாழன் கிரகத்தின் துணை கிரகம் யூரோப்பா. இது முழுவதும் ஐஸ்கட்டியால் ஆனது. இங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்ற விவரம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். யூரோப்பா துணை கண்டம் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்கள் பூமியுடன் ஒத்துப்போவதை கண்டறிந்தனர்.
தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் அருகே போங்யங் தங்க சுரங்கத்தின் 2.8 கி.மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய ஒளிபடாத அங்கு தண்ணீரில் பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வதும் கத்ரியக்கங்கள் ஏற்படுவதும் தெரியவந்தது.
அதே போன்ற நிலை யூரோப்பா துணை கிரகத்தின் நிலப்பரப்பிலும் உள்ளது. அங்குள்ள நிலமேற்பரப்பில் ஐஸ்படுகையின் 10 கி.மீட்டர் ஆழத்தில் கடல் போன்ற தண்ணீர் மறைந்துள்ளது. அதில் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கலாம் என கருதப்படுகிறது.
No comments:
Post a Comment