கம்பஹா, நெதகமுவ - போகஸ் ஹந்திய பகுதியில் இன்று (4) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் கையிலும் காலிலும் படுகாயமடைந்த அந்த 34 வயது நபர், கம்பஹா தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணல் மற்றும் கிரவல் மணல் விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதமே சம்பவத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment