தாய்வானின் ஹுவாலின் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 6.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த நகரில் உள்ள பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடற்கரை நகரமான ஹுவாலினில் இருந்து வடக்கு திசையில் சுமார் 21 கிலோமீற்றர் தொலைவில், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்துள்ளது.
நிலநடுக்கம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளபோதும் அதனால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. எனினும், அந்த பகுதியில் உள்ள பாரிய ஹோட்டல் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாகவும், அதில் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்புப் பணியில் 400 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரை 50 க்கும் மேற்பட்ட ஜப்பானிய சுற்றுலாப்பயணிகள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் ஹோட்டல் உட்பட 3 பாரிய கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன் இரு பாலங்களும் சேதமடைந்துள்ளன.
No comments:
Post a Comment