கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகம் : நால்வர் காயம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகம் : நால்வர் காயம்

கொழும்பு 14, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நாகாலகம் வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (02) பிற்பகல் 4.30 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலிலேயே, இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருந்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, துப்பாக்கிச்சூட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment