பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிப்பு

பாரிய ஊழல், மோசடி, அரச சொத்துக்கள், வரப்பிரசாதங்கள், அதிகாரம் மற்றும் உரிமைகளை முறையற்ற விதத்தில் உபயோகித்தல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

1135 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை ஆணைக்குழுவின் தலைவர் பீ. பத்மன் சூரசேனவினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு. குணதாச மற்றும் ஏனைய அங்கத்தவர்களான விக்கும் களுஆரச்சி, ஆர். ரணசிங்க, கிஹான் குலதுங்க, பீ.ஏ. பிரேமதிலக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இதன்போது சமூகமளித்திருந்தனர்.

பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள், ஊழல் மற்றும் அதிகார, அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக ஆராய்வதற்காக, 2015ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் திகதி இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

இதுவரை இவ்வாணைக்குழு பதினேழு அறிக்கைகளை ஜனாதிபதி வசம் கையளித்துள்ளதுடன், அவற்றைச் சரி செய்வதற்கான பரிந்துரைகளை சுமார் ஆயிரத்து 200 பக்கங்களில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment