அமெரிக்க இராணுவ தளங்களை காட்டிக் கொடுத்த ‘செயலி’ - News View

About Us

About Us

Breaking

Monday, January 29, 2018

அமெரிக்க இராணுவ தளங்களை காட்டிக் கொடுத்த ‘செயலி’

இராணுவத் தரப்பினர் தமது உடற்பயிற்சி இடங்களை இணையதளத்தில் பகிர்ந்துகொண்டதை அடுத்து உலகெங்கும் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் பற்றிய விபரம் அம்பலத்திற்கு வந்துள்ளது. உடற்பயிற்சி கண்காணிப்பு ஸ்ட்ராவா (Strava) செயலியை பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் ஓடுகின்ற அல்லது சைக்கிளில் செல்கின்ற பாதை வரைபடத்தின் ஊடே காண்பிக்கப்படுகிறது.

இந்த வரைபடத்தில் சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள வெளிநாட்டு இராணுவ தளங்களையும் கண்காணிக்க முடியுமாகியுள்ளது. இந்த வரைபடத்தை அமெரிக்க இராணுவம் அவதானித்ததாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் பேச்சாளரான விமானப்படை கர்னல் ஜோன் தோமஸ் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு குறிப்பிட்டார். இந்த வரைபடத்தின் தனிப்பட்ட செயல்கள் நீக்கப்பட்டதாக ஸ்ட்ராவா குறிப்பிட்டுள்ளது.

இந்த வரைபடத்தின் புதிய பாகம் 2017 நவம்பரிலேயே வெளியிடப்பட்டபோதும் கடந்த வார இறுதியிலேயே இது பற்றிய உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை முதல்முறை கண்டறிந்த அவுஸ்திரேலிய மாணவனான நதன் ருசர் குறிப்பிடும்போது, “அமெரிக்க தளங்களை தெளிவாக அவதானிக்க முடிவதோடு அடையாளமிட முடியுமாக உள்ளது” என்றார்.

இவ்வாறான இராணுவத் தளங்களை உள்ளுர் மக்கள் மற்றும் கூகுள் வரைபடங்கள் மூலம் கண்டறிய முடியும் என்றபோதும் ஸ்ட்ராவா செயலி காட்டும் வரைபடத்தில் இராணுவ தளத்திற்குள் இடம்பெறும் நடமாட்டங்களை தெளிவாக அவதானிக்க முடிகிறது.

No comments:

Post a Comment