பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக்கான செயற்திட்டத்தை இன்று பார்வையிட்டுள்ளார். கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்தைப் பார்வையிட்டதன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
2020ம் ஆண்டளவில் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேல்மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment