பிறந்திருக்கும் ஆங்கிலப் புத்தாண்டையடுத்து எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இந்த வருடத்திற்கான தனது கடமைகளை இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் ஆரம்பித்தார்.
இதற்கான நிகழ்வு கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. மங்கள விளக்கு ஏற்றி தனது கடமையை ஆரம்பித்த இரா. சம்பந்தன். புத்தாண்டு சிற்றுண்டிகளையும் பகிர்ந்தளித்தார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இரா. சம்பந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இவரை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், அவரது புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
பூரண சுகத்தைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து திரும்பிய எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இந்த ஆண்டுக்கான தனது கடமைகளை இன்று முதல் ஆரம்பிக்கின்றார்.
No comments:
Post a Comment