ஊடக நெறிமுறைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் பிரேரணையில் பிரதமர் கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

ஊடக நெறிமுறைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் பிரேரணையில் பிரதமர் கைச்சாத்து

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கடந்த மாதம் 4ஆம் திகதி வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட ஊடக நெறிமுறைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட்டுள்ளார். இக்கைச்சாத்திடும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்றது.

அரசியல் அமைப்பின் படி நியாயமான பக்கச்சார்பற்ற தேர்தலை நடத்துவது இந்த ஊடக நெறிமுறைகளின் நோக்கமாகும். ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ள இந்த நெறிமுறைகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதும் அது சட்டபூர்வமாகிவிடும்.

இந்த ஊடக நெறிமுறைகளுக்கு கட்டுப்படுவது அனைத்து ஊடகங்களினதும் பொறுப்பும், கடமையுமாகும். இது நல்லாட்சியின் மற்றுமொரு வெற்றியாகும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்களான வஜிர அபயவர்தன, சாகல ரத்னாயக்க , ரவூப் ஹக்கீம், மனோகணேசன் மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment