2018ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்குமுகமாக இன்று செவ்வாய்க்கிழமை ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் விஷேட வைபவம் பிரதேச சபையின் செயலாளரும் விஷேட ஆணையாளருமான எம்.எச்.எம். ஹமீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அலுவலக முன்றலில் காலை 09.30 மணியளவில் செயலாளரினால் தேசியக் கொடியேற்றப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த சகலரையும் நினைவு கூர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2018ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிப்பதற்கான உறுதிமொழியினை செயலாளரின் தலைமையில் அனைத்து உத்தியோகத்தர்களும் வாசித்து சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நிலைபேறான விவசாய அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில் புத்தாண்டு வேலைத்திட்டங்கள் தொடர்பாக செயலாளர் உரை நிகழ்த்தினார். அதிமேதகு ஜனாதிபதியினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள ”2018 தேசிய உணவு உற்பத்தி ஆண்டு” நிகழ்ச்சித் திட்டத்தினை அமுல்படுத்தும் வகையில் ஓட்டமாவடி பிரதேச சபை திண்மக்கழிவு முகாமைத்துவ உற்பத்தி செய்யப்பட்ட சேதனப்பசளை மற்றும் மரக்கன்றுகள் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment