2018ஆம் ஆண்டின் ஆரம்ப நேரத்தில் 3 குழந்தைகளை பிறவசித்துள்ளார் தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான தாய் ஒருவர். தம்புள்ளை பஹல ஹெரவுல பகுதியைச் சேர்ந்த பியானி மலிகா என்பவரே இந்த மூன்று குழந்தைகளையும் ஒரே சூழில் பிரசவித்துள்ளார்.
குழந்தைகளும், தாயும் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக தம்புள்ளை வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் வருட ஆரம்ப நேரத்தில் குழந்தைகளை பிறசவித்து நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அதேபோன்று கடந்த வருட ஆரம்பத்தில் கண்டி ஆதார வைத்தியசாலையில் ஒரே சூழில் நான்கு குழந்தைகளை பெண்ணொருவர் ஈன்றெடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டின் ஆரம்ப நேரத்தில் பிறந்த மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தக் குழந்தைகளை ஈன்றெடுத்த தாய் இதுகுறித்து கருத்து வெளியிட்டபோது, தனக்கு 5 வயதில் ஆண் குழந்தையொன்று இருப்பதாகவும், தனது கணவர் கொழும்பில் லொறி சாரதியான தொழில் புரிவதால் குழந்தைகளை பராமரிக்கும் செலவு வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் கடினமாக இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment