வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 3, 2018

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இளைஞர்கள் சிலர் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூந்துகள் இன்றியும் வியாபார நிலையங்களில் மக்கள் இன்றியும் வெறிச்சோடிக் காட்சியளிக்கும் அரச பேரூந்து நிலையத்தில் இன்று காலை வியாபார நிலையத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருந்தது.

வட மாகாண முதலமைச்சர் பழைய பேரூந்து நிலையம் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்லுமாறு தெரிவித்துள்ளார். புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்புத் தெரிவித்து இ.போ.ச. சபையினர் மூன்றாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களது வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து பழைய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130 க்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் பேரூந்துகள் கடந்த வாரம் முதல் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment