பெரு நாட்டில் பசமாயோ என்னும் நகரம் அமைந்துள்ளது. இது கடற்கரை நகரமாகும். இப்பகுதிக்கு செல்லும் வீதிகள் மிகவும் ஆபத்தானவையாகவும் வீதிகளை ஒட்டி சுமார் 100 மீட்டர் ஆழமான பள்ளங்கள் உள்ளன.
இந்நிலையில் பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து 80 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பஸமயோ பகுதியில் சுமார் 57 பயணிகளை ஏற்றி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. வீதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது ஒரு ஆபத்தான வளைவில் எதிரே வந்த மினி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அந்த பஸ் வீதியை ஒட்டி இருந்த சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கப்போராடினர். ஆனால் பள்ளத்தில் இருந்து மக்களை மீட்பது கடினமாக இருந்ததால் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடைமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
No comments:
Post a Comment