ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வு இன்று காலை ஹட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஜெமில் தலைமையில் இடம்பெற்றது.
இந்த வகையில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஹட்டன் - டிக்கோயா போன்ற பிரதேசங்களில் இருந்து கட்சிகளின் வேட்பாளர்கள் வருகை தந்தனர்.
இதன்போது உள்ளூராட்சி தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வேளையில் எவ்வாறான சட்டதிட்டங்களை கையாள வேண்டும் என சட்ட விதிகள் தொடர்பில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஜெமில் தெளிவுப்படுத்தினார்.
No comments:
Post a Comment