தென்கிழக்குப் பல்கலைக்கழக காத்தான்குடி இளமானிகள் ஒன்றியத்தின் வருடாந்த கௌரவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 1, 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழக காத்தான்குடி இளமானிகள் ஒன்றியத்தின் வருடாந்த கௌரவிப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை தொடர்ந்து கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இந்த ஆண்டு "ஒன்றிணைந்த கரங்கள்" எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் 2018ம் ஆண்டின் முதல் நாளான (01.01.2018) நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வானது புதிய மாணவர்கள் வரவேற்பு, சகோதரத்துவ மேம்பாடு, பிரியாவிடை என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இடம் பெற்றதோடு தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடரும் அனைத்து கலைக் கலாசர பீட, இஸ்லாமிய கற்கைநெறிகள் பீட, பிரயோக விஞ்ஞான பீட, வர்த்தக முகாமைத்துவ பீட மற்றும் பொறியியல் பீடம் ஆகிய பீடங்களையும் சேர்ந்த காத்தன்குடியின் மொத்தமாக சுமார் 121 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழக காத்தான்குடி இலமானிகள் ஒன்றியத்தினால் கௌரவம் பெற்றதுடன் பல்கலைக்கழகத்தில் விசேட திறன்களை வெளிப்படுத்திய மற்றும் தலைமைத்துவ பதவிகளில் சேவையாற்றுகின்ற மாணவர்களுக்கும் இதன்போது விசேட பாராட்டுக்களும் சான்றிதல்களும் வழக்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வானது ஒன்றியத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடம், தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவன் செல்வன். ச.மு. ஆஸாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றன. மேலும் குறித்த ஒன்றியமானது "மார்க்க வரையறைகளை பாதுகாத்து கட்டுப்பாடுகளுடன் ஊரின் பெயருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வண்ணம் சகோதரத்துவத்துடன் நடந்து மிகச்சிறந்த முன்மாதிரி மிக்க பட்டதாரி தலைவர்களை உருவாக்கும் ஓரே நோக்கை கொண்டு தன் பணிகளை செய்கின்றமை சுட்டிக்கட்டத்தக்க ஒரு விடயமாகும்."

எஸ்.சஜீத்

No comments:

Post a Comment