நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதி மூடப்படடும் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மீளத் திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீடுகள் இடம்பெறும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 5 ஆயிரத்து 116 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகி 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment