அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடிவில் நாய் பொம்மை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 30, 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடிவில் நாய் பொம்மை

சீனாவில் ஷாங்ஸி மாகாண தலைநகர் தையு யான் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் மிகப்பெரிய ராட்சத நாய் பொம்மை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அது டிரம்ப் போன்று இடது கை விரலை மேலே தூக்கிய வண்ணம் உள்ளது.

சீனாவில் விலங்குகள் பெயரில் புத்தாண்டு கொண்டாடப்படுவது வழமை. அந்த வகையில் அடுத்த ஆண்டு (2018) நாய் புத்தாண்டு வருகிறது. அதை வரவேற்கும் முகமாக டிரம்ப் உருவத்தில் நாய் பொம்மை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்தப் பொம்மையின் கண் இமைகள் இரண்டும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கழுத்தில் சிவப்பு பட்டை அணிவிக்கப்பட்டுள்ளது. இப்பொம்மையை பொது மக்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு சீனாவில் பூனை புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது டிரம்பை உருவகப்படுத்தி அங்கு பூனை பொம்மை வைக்கப்பட்டு அது பார்வையாளர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment