றஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலை விழா. - News View

About Us

About Us

Breaking

Saturday, December 2, 2017

றஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலை விழா.

காவத்தமுனை தாருல் ஹஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்களுக்கான மாற்றுத் திறனாளிகள் கலை விழா கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கலாசாரப் பிரிவினரின் ஏற்பாட்டில் 2017.11.30ஆம்திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வானது தாருல் ஹஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலையில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க். நியாஸ் (நளிமி) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், தாருல் ஹஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலை அதிபர் நெய்னாமுஹம்மது மற்றும் மாணவர்கனுக்கு கற்பிக்கும் அசிரியைகள் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், அவர்களின் திறமைகளையும் வெளிக்காட்டினர்.

No comments:

Post a Comment