மன்னர் ஆட்சிக் காலத்தில் யுத்தங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பெறுமதிமிக்க இரு வாள்களும், புத்தர் சிலையொன்றையும் பிபிலை பொலிசார் நேற்று மாலை மீட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபிலை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, அவர் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று விரைந்து, குறிப்பிட்ட இடத்தையும் வீடொன்றையும் சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்டனர்.
அவ்வேளையிலேயே ரூபவ் வீட்டுத் தோட்டத்தில் குழியொன்றினுள் மூடி மறைக்கப்பட்டிருந்த இரு வாள்களும், வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன.
பிபிலைப் பகுதியின் நாகல என்ற இடத்தில் மீட்கப்பட்ட நான்கு அடி நீளமானதும் ஆறு அங்குலமானதுமான வாள்கள் இரண்டும் இரண்டு அடி உயரமானதும் ஏழரை அங்குல அகலமானதுமான புத்தர் சிலையும் மீட்கப்பட்டுள்ளனவாகும்.
அத்துடன், தேடுதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டிலிருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் பிபிலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென பிபிலை பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment