சேத­ம­டைந்த நாண­யத்­தாள்களை வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றமாகும் - News View

About Us

About Us

Breaking

Friday, December 29, 2017

சேத­ம­டைந்த நாண­யத்­தாள்களை வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றமாகும்

சேத­ம­டைந்த நாண­யத்­தாள்கள் நாளை முதல் செல்லுபடியற்றதாகும். எனவே சேத­ம­டைந்த நாணயத் தாள்­களை எதிர்­வரும் ஜனவரி மாதம் முதலாம் திக­திக்கு முன்னர் மாற்றிக் கொள்­ளு­மாறு இலங்கை மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது. 

சிதைக்­கப்­பட்ட நாணயத் தாள்கள் மற்றும் கிழிந்த நாணயத் தாள்களை வைத்­தி­ருப்­ப­வர்கள் அருகில் உள்ள இலங்கை மத்­திய வங்கி கிளை­களில் மாற்றிக் கொள்­ளு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாண­யத்­தாள்­களில் எழு­துதல், அவற்றை ஏதேனும் ஒரு வகையில் சிதைத்தல் மட்­டு­மல்­லாது அவற்றை வைத்­தி­ருப்­பதும் தண்டனைக்கு­ரிய குற்­ற­மாகும் என மத்­திய வங்கி தெரி­வித்­துள்­ளது. எனவே சிதைக்­கப்­பட்ட நாண­யத்­தாள்கள் மற்றும் கிழிந்த நாணயத்தாள்­களை எதிர்­வரும் முதலாம் திக­திக்கு முன்னர் இலங்கை மத்­திய வங்கி அல்­லது மத்­திய வங்கி கிளை­களில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

டிசம்பர் மாதம் 31 ஆம் திக­திக்கு பின்னர் சிதை­வுக்­குள்­ளான நாணயத்­தாள்கள் செல்­லு­ப­டி­யற்­ற­தாகும். அவற்றை பாவனைக்குட்ப­டுத்த முடி­யாது. அத்­தோடு நாண­யத்­தாள்­களை வேண்­டு­மென்றே சேதப்­ப­டுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப் பணம் அல்லது சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment