நாட்டில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் அதிக மழையால் வீடு மற்றும் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படும். இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த பணிப்புரையின்படி இந்நஷ்டஈடு வழங்கப்படுகிறது.
இலங்கையின் தென் கடற்கரைப் பிரதேசத்திலும் மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் கடும்மழை காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள், சொத்துகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை தற்போது பிரதமர் அலுவலகத்துக்கும், உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான நிதியை கடந்த 30ஆம் திகதி மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய ஆலோசனையை அடுத்து நிதி அமைச்சு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
No comments:
Post a Comment