இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த நபரொருவர் நேற்று நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
35 வயதான குறித்த சந்தேக நபர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ஏசியா எயார்லைன்சுக்கு சொந்தமான எ.கெ 043 என்ற விமானத்தில் மலேசியா கோலாலம்பூரியிலிருந்து வருகை தந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரின் பயணப் பொதியில் இருந்து 355 கிராம் நிறையுடைய 19,56,570 ரூபா பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டதாக சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். குறித்த தங்கம் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment