ஊடக நெறிமுறை பிரேரணையில் பிரதமர் நாளை கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Sunday, December 31, 2017

ஊடக நெறிமுறை பிரேரணையில் பிரதமர் நாளை கைச்சாத்து

ஊடக நெறிமுறைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பிரேரணையில் பிரதமர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கைச்சாத்திட உள்ளார். அரசியல் யாப்பிற்கு அமைவாக நீதியான மற்றும் பக்கச்சார்பற்ற தேர்தலொன்றை நடத்துவதற்காக டிசம்பர் மாத ஆரம்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்திய 'ஊடக வழிகாட்டல் தொடர்பான பிரேரணையை' பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் ஆவணத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை கைச்சாத்திடவுள்ளார்.

இது தொடர்பான நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இந்த வழிகாட்டலுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் சட்டமாக்கப்படும். அதன்பிற்பாடு சம்பந்தப்பட்ட ஊடக வழிகாட்டலுக்கு உட்படுவது ஊடகங்களின் பொறுப்பாகும்.

இதன்மூலம் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள அனைத்துத் தேர்தல்களும் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதுடன் ஊடகங்களின் செயற்பாடுகள் பக்கச்சார்பு மற்றும் நீதியானது என்பது உறுதிப்படுத்தப்படும். இது நல்லாட்சி அரசாங்கத்தின் மற்றுமொரு வெற்றியாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment