ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் புதிய விளையாட்டு உபகரணம் சீனாவிலிருந்து இறக்குமதி. - News View

About Us

About Us

Breaking

Sunday, December 31, 2017

ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் புதிய விளையாட்டு உபகரணம் சீனாவிலிருந்து இறக்குமதி.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை சிறுவர் பூங்காவில் புதிதாக விமானத்தின் வடிவமைப்பைக் கொண்ட சிறுவர்களுக்கான விளையாட்டுத் தொகுதி பொருத்தப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட இந்த மாதிரி விமானத் தொகுதி கிழக்கு மாகாணத்தில் முதற் தடவையாக ஓட்டமாவடி பூங்காவிலேயே பொருத்தப் பட்டுள்ளது. 

எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகளுக்கு புதிதாக அனுமதிக்கபடவுள்ள மாணவர்களை வரவேற்கும் வகையில் எதிர்வரும் புதன்கிழமை (03) பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாழடைந்த நிலையில் பராமரிக்கப்படாமல் காணப்பட்ட ஓட்டமாவடி சிறுவர் பூங்காவை துரிதமாக புனரமைத்து மீண்டும் மக்களின் பாவனைக்காக வழங்குவதற்கு தற்போதுள்ள பிரதேச சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான எம்.எச்.எம். ஹமீம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இதனை திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.  


No comments:

Post a Comment