2017 ஆம் ஆண்டில் 81 ஊட­க­வி­ய­லா­ளர்கள் படுகொலை - News View

About Us

About Us

Breaking

Sunday, December 31, 2017

2017 ஆம் ஆண்டில் 81 ஊட­க­வி­ய­லா­ளர்கள் படுகொலை

கடந்த 2017 ஆம் ஆண்டில் கட­மையின் போது தாக்­கு­தல்­க­ளுக்கு இலக்­காகி குறைந்­தது 81 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பெல்­ஜி­யத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சம்­மே­ளனம் (ஐ.எப்.ஜே.) நேற்று வெளி­யி­டப்­பட்ட அறிக்கையில் தெரி­வித்­துள்­ளது. 

இதற்கு முந்­திய ஆண்­டான 2016 ஆம் ஆண்டு கட­மையின் போது 93 ஊட­க­வி­ய­லா­ளர்கள் பலி­யா­கி­யுள்ள நிலையில் அத்­தொ­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் இந்த வரு­டத்­தி­லான உயி­ரி­ழப்­புகள் சிறிது குறைவாக உள்ள போதும் அத்­தொகை கவலை தரக்­கூ­டிய ஒன்றாகவே தொடர்ந்து உள்­ள­தாக அந்த சம்­மே­ளனம் குறிப்பிட்டுள்ளது.

"அத்­துடன் 2017 ஆம் ஆண்டில் பெரு­ம­ள­வான ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிறையில் அடைக்­கப்­பட்­டனர். அவர்­களில் 250 பேருக்கும் அதிகமானோர் சிறை­யி­லேயே தொடர்ந்தும் உள்­ளனர்" எனத் தெரிவித்த சர்­வ­தேச ஊட­க­வி­ய­லாளர் சம்­மே­ளனம், ஊட­கங்கள் சுய தணிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வது பரந்­த­ளவில் இடம்­பெ­று­வ­துடன் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுதந்­திர ஊட­க­வி­ய­லுக்கு எதி­ரான முறையில் தாக்­கு­தல்­க­ளுக்கும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் உட்­பட்டு வரு­வது மோசமான அளவில் அதி­க­ரித்து வரு­வ­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

உலகில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் இலக்­கு­ வைக்­கப்­பட்ட படுகொலைகள், கார் குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் துப்­பாக்கிச் சமர் என்­ப­வற்றில் சிக்கி தமது உயிரை இழந்து வரு­வ­தாக அந்த சம்மே­ளனம் கூறு­கி­றது.

அதி­க­ள­வான ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்ட நாடாக மெக்ஸிக்கோ உள்­ளது, இதற்கு அடுத்­த­டுத்த இடங்­களில் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் உள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சம்­மே­ளனம், பிராந்திய ரீதியில் ஆசிய பசுபிக் பிராந்­தி­யத்­தி­லேயே அதி­க­ளவு ஊடக­வி­ய­லா­ளர்­களின் மர­ணங்கள் இடம்பெற்­றுள்­ள­தா­கவும் அங்கு 2017 ஆம் ஆண்டில் 26 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்லப்பட்டுள்ளதா­கவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment