மண்சரிவு எச்சரிக்கை ! மக்கள் அவதானமாக இருக்கவும்! - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 29, 2017

மண்சரிவு எச்சரிக்கை ! மக்கள் அவதானமாக இருக்கவும்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு எச்சரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று 29.11.2017 காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் லக்கல, பள்ளேகல பிரதேச செயலக பிரிவும் சுற்றுப்புறங்களிலும், அல்கடுவ பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களிலும் மற்றும் கண்டி மத தும்பர பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களை அண்மித்த இடங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மில்லிமீற்றரை அதிகரித்துள்ள நிலையில், மேலும் மழை தொடருமாயின் மண்சரிவு, பாறை விழுகை, நிலவெட்டுசாய்வு மற்றும் தரை உள்ளிறக்கம் என்பவை தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment