எல்லை நிர்ணய வர்த்தமானியின் இடைக்கால தடை நீக்கம். - News View

About Us

About Us

Breaking

Thursday, November 30, 2017

எல்லை நிர்ணய வர்த்தமானியின் இடைக்கால தடை நீக்கம்.

உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதற்கு மனுதாரர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இன்று 30.11.2017ஆந்திகதி குறித்த மனுதாரர்களின் சட்டத்தரணிகளால் மனுக்களை மீளப் பெறுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதி குழுவினரால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஏற்பட்ட உடன்பாட்டுக்கு அமைய குறித்த மனுவை விலக்கிக்கொள்ள மனுதாரர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், குறித்த வழக்கு விசாரணை தினமான டிசம்பர் 04ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில், குறித்த வர்த்தமானிக்கு எதிராக விதிக்கபட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை இரத்துச் செய்யவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment