நாட்டின் நிதிப் பிரச்சினைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பிரச்சினைகளிலிருந்து மீட்பதற்கான வழிமுறைகள் எம்மிடம் உள்ளன - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 13, 2021

நாட்டின் நிதிப் பிரச்சினைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பிரச்சினைகளிலிருந்து மீட்பதற்கான வழிமுறைகள் எம்மிடம் உள்ளன - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பத்திலேயே தனவந்தர்களுக்கு கோடிக்கணக்கில் வரிச் சலுகைகளை வழங்கியதாலே நாட்டில் நிதிப் பிரச்சினை ஏற்பட காரணமாகும். இதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். அத்துடன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்பதற்கு தேவையான வழிமுறைகள் எம்மிடம் இருக்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் எதிர்காலத்தில் இதுதொடர்பான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பது தொடர்பாக ஆராயும் குழுவின் கலந்துரையாடல் நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டபின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டாார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிதிப் பிரச்சினைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். நிதி பிரச்சினையில் மீள்வதற்கு பல மூலாேபாய திட்டங்கள் வழிகள் இருக்கின்றன. அதில் ஓர் அங்கமே சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பிரச்சினையை தீர்த்துக் கொள்ள மேற்கொள்ளும் திட்டமாகும்.

அவ்வாறான பல திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன. அந்த திட்டங்களை மேற்கொள்வதற்கான திறமையான நிபுணத்துமிக்கவர்களும் எங்களிடம் இருக்கின்றனர். அதனால் நாங்கள ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நிதிப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.

என்றாலும் இது சாதாரண விடயமல்ல. மிகவும் கஷ்டமான காரியம். மிகவும் பாரிய நிதி நெருக்கடியிலேயே நாடு இருக்கின்றது. என்றாலும் அதனை மேற்கொள்வதற்கான திறமையும் அனுபவமும் எங்களிடம் இருக்கின்றது.

மேலும் அரச வருமானங்கள் இல்லாமல் போயிருப்பதால் அரசாங்கம் வங்குராேத்து அடைந்திருக்கின்றது. அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த ஆரம்பத்திலேயே, தனவந்தர்களுக்கு கோடிக்கணக்கில் வரிச் சலுகைகளை வழங்கியதனாலேயே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் நாட்டுக்கு கிடைத்து வந்த வருமானம் இல்லாமல் போயிருக்கின்றது.

சரியான அரச வருமானம் ஒன்று இல்லாமல் நாடொன்றில் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது. என்றாலும் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அது தொடர்பான மூலாேபாய முறைகள் மாற்று திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன.

அத்துடன் பொருளாதார பிரச்சினை மாத்திரமல்ல, நாட்டின் சமூக அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. இந்த பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்பதற்கு ஐக்கியமாகவும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment