இலங்கை உட்பட நான்கு நாட்டு பயணிகள் வருகையின் தடையை நீடித்தது துபாய் - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

இலங்கை உட்பட நான்கு நாட்டு பயணிகள் வருகையின் தடையை நீடித்தது துபாய்

இலங்கை உட்பட நான்கு தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான சேவைகளை எதிர்வரும் ஜூலை 21 வரை நிறுத்தி வைத்துள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உள்வரும் பயணிகள் விமானங்களின் இடைநீக்கம் குறைந்தபட்சம் ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று துபாயை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் எமிரேட்ஸ் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்க உத்தரவுகளுக்கு இணங்க, எமிரேட்ஸ் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இலங்கையிலிருந்து துபாய் செல்லும் பயணிகள் விமான சேவையினை 2021 ஜூலை 21 வரை நிறுத்தி வைக்கும்.

மேலும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அல்லது இலங்கை வழியாக இணைந்த பயணிகள் கடந்த 14 நாட்கள் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க ஏற்றுக் கொள்ளப்படாது” என்று விமான நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டினர், ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கொவிட்-19 நெறிமுறைகளுக்கு இணங்கும் இராஜதந்திர பணிகளின் உறுப்பினர்கள் விலக்கு பெற்றவர்கள் மற்றும் பயணத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad