மாகாணங்களிடையே பொதுப் போக்குவரத்து ஓகஸ்ட் வரை மீண்டும் முடக்கம் - புதிய திரிபுகள் கிராமங்களை சென்றடைய வாய்ப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, July 16, 2021

மாகாணங்களிடையே பொதுப் போக்குவரத்து ஓகஸ்ட் வரை மீண்டும் முடக்கம் - புதிய திரிபுகள் கிராமங்களை சென்றடைய வாய்ப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத பொதுப் போக்குவரத்து சேவைகள் நாளை (17) முதல் ஓகஸ்ட் 01 ஆம் திகதி வரை மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (14) முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அத்தியாவசிய சேவைகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பொதுப் போக்குவரத்து சேவைகளை இவ்வாறு மீண்டும் இடைநிறுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இன்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் அண்ணளவாக 100% ஆனோருக்கு எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தடுப்பூசி செலுத்த முடியுமென, கொவிட் குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கொவிட் திரிபுகள் கிராமங்களுக்கு செல்வதை தடுக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 01 முதல் பொதுப் போக்குவரத்தை மீண்டும் மேற்கொள்ள முடியுமாக இருக்குமென அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad