அரசியலில் என்னை மௌனிக்கச் செய்ய முடியாது என்கின்றார் தயாசிறி - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 13, 2021

அரசியலில் என்னை மௌனிக்கச் செய்ய முடியாது என்கின்றார் தயாசிறி

அரசியல் களத்தில் எவராலும் தன்னை மௌனிக்கச் செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கிடையிலான முறுகல் நிலை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியில் சுதந்திரக் கட்சியின் பங்களிப்பும் உள்ளது. இதனை புரிந்து கொள்ளாமல், நன்றி மறந்து விமர்சிக்கின்றனர்.

சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாதிருந்திருந்தால் கண்டி மாவட்டத்தில்கூட 50 ஆயிரம் வாக்குகளால் தோல்வியை சந்திக்க நேரிட்டிருக்கும் என்பதை திலும் அமுனுகம போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியும் செய்கின்றது. அரசியலும் செய்கின்றது. ஆனால் சுதந்திரக் கட்சிக்கு இவ்விரண்டுமே இல்லாமல் போயுள்ளது. 

எனவே, என்னை எவரும் மௌனிக்க வைக்க முடியாது. நான்தான் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad