நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக பொய்யான பிரசாரங்கள் முன்னெடுப்பு என்கிறார் அமைச்சர் கம்மன்பில - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக பொய்யான பிரசாரங்கள் முன்னெடுப்பு என்கிறார் அமைச்சர் கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

அடுத்த 27 நாட்களுக்கான பெட்ரோலும், 24 நாட்களுக்கான டீசலும் எம்மிடம் உள்ள நிலையில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள முயற்சிப்பதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வலுசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கைக்கான எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திடம் டொலர் இல்லை, ஆகவே விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், எனவே இப்போதே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்ளுங்கள், வீடுகளில் இப்போதே களஞ்சியப்படுத்தி வைத்து விடுங்கள் என சமூக தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த பொய்யினால் மக்களையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளவே சிலர் முயற்சிக்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad