இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கத் திட்டம் : அங்கிகாரம் வழங்கியது அமைச்சரவை - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 13, 2021

இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கத் திட்டம் : அங்கிகாரம் வழங்கியது அமைச்சரவை

(இராஜதுரை ஹஷான்)

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான மூலோபாய திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

60 சதவீத காற்று மாசுபாடு வாகனங்களில் இருந்து வெளியாகும் புகைகளினால் ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்கள் மேற்கொண்ட பல ஆராய்ச்சிகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது பாவனையில் உள்ள வாகனங்களில் கணிசமானவை 10 ஆண்டுகளுக்கு மேலானவை. இதுபோன்ற பழைய வாகனங்கள் முறையாக பராமரிக்காத காரணத்தினால் விஷ வாயு வெளியேற்றத்திற்கு வழி வகுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவின்படி 2020ஆம் ஆண்டு இறுதியில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 8 மில்லியனை கடந்துள்ளது.

ஆகவே வளி மாசடைவதை தடுப்பதற்கு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு சுற்றாடற்துறை அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad