நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் விரைவாக பரவக்கூடிய டெல்டா வைரஸ் : பயணத் தடையை மேலும் தளர்த்துவது ஆபத்து - பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் விரைவாக பரவக்கூடிய டெல்டா வைரஸ் : பயணத் தடையை மேலும் தளர்த்துவது ஆபத்து - பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை

விரைவாக பரவக்கூடிய டெல்டா கொரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இனங்காணப்பட்டு வரும் நிலையில் பயணத் தடையை மேலும் தளர்த்துவது பொருத்தமானதல்ல என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அது தொடர்பில் நேற்று தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா வைரஸ் சூழ்நிலையை உருவாக்கும் முன்னணி திரிபு வைரஸாக டெல்டா திரிபு கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் பரவலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அவ்வாறு நாட்டின் பிரதான கொரோனா வைரஸாக டெல்டா திரிபு வைரஸ் பரவும் நிலை ஏற்படுமானால் நாடு இதற்கு முன்னர் இரண்டு முறை எதிர்கொள்ள நேர்ந்த நிலையை விட மிக மோசமான ஆபத்து நிலையை எதிர்கொள்ள நேரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad