அரசாங்கத்தின் தேவைகளுக்கோ அல்லது வேறு நபர்களின் தனிப்பட்ட நலன்களுக்கோ நம்பிக்கையில்லாப் பிரேரணையை மாற்றியமைக்க அனுமதிக்க முடியாது - எஸ்.எம்.மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 20, 2021

அரசாங்கத்தின் தேவைகளுக்கோ அல்லது வேறு நபர்களின் தனிப்பட்ட நலன்களுக்கோ நம்பிக்கையில்லாப் பிரேரணையை மாற்றியமைக்க அனுமதிக்க முடியாது - எஸ்.எம்.மரிக்கார்

(நா.தனுஜா)

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக எம்மால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கத்திற்குச் சாதகமாக மாற்றக்கூடிய வகையில் திருத்தமொன்றை முன்வைத்துள்ளார். எனவே அரசாங்கத்தின் தேவைகளுக்கேற்பவோ அல்லது வேறு நபர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு அமைவாகவோ நம்பிக்கையில்லாப் பிரேரணையை மாற்றியமைப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றாலும், தோற்கடிக்கப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம் ஈடேறும் என்று சுட்டிக் காட்டியுள்ள அவர், நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடைந்தால், அது நாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அதேவேளை இப்பிரேரணை தோல்வியடைந்தால், இவ்விடயத்தில் திரையின் பின்னாலிருந்து செயற்பட்டவர்கள் மக்களின் முன்னாள் பகிரங்கப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment