உஸ்பெகிஸ்தான் பெண்னை இலங்கைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 20, 2021

உஸ்பெகிஸ்தான் பெண்னை இலங்கைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணொருவரை நாட்டுக்கு அழைத்து வந்து விபச்சார வர்த்தகத்தில் ஈடுபடுத்தியமைக்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய வெல்லவத்தை பகுதியில் வசிப்பவர் ஆவார்.

இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தான் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வந்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் மனைவி, உஸ்பெக் நாட்டவர், இதே குற்றத்திற்காக இலங்கையில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு, தற்சமயம் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்நிலையில் தண்டனைச் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் சந்தேக நபர் நீதிவான் முன் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மனித கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் 10 முதல் 20 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை அவருக்கு எதிராக விதிக்க முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad