தலிபான் முன்னேற்றத்தால் நூற்றுக் கணக்கான ஆப்கான் அகதிகள் தஜிகிஸ்தானுக்கு தப்பியோட்டம் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

தலிபான் முன்னேற்றத்தால் நூற்றுக் கணக்கான ஆப்கான் அகதிகள் தஜிகிஸ்தானுக்கு தப்பியோட்டம்

ஆப்கானிஸ்தானில் இருந்து குறைந்தது 347 அகதிகள் இரண்டு நாட்களில் மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளனர்.

தஜிகிஸ்தான் எல்லைக் காவலர்களை மேற்கோள் காட்டி அரச தகவல் நிறுவனமான கோவர் புதன்கிழமை, அகதிகள் உயிரைக் காப்பாற்ற தலிபானியர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்றும், எல்லைக் கடக்கும்போது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

ஆப்கானிலிருந்து வெளிநாட்டு படையினர் பின்வாங்குவதால் தலிபான் போராளிகள் அங்கு பெரும் முன்னேற்றத்தை கண்டு வருகின்றனர்.

புதன்கிழமை தலிபான்கள் பாகிஸ்தானுடனான எல்லையில் முக்கிய மூலோபாய எல்லைக் கடப்பைக் கைப்பற்றியதாகக் கூறினர்.

எனினும் ஆப்கானிய உள்துறை அமைச்சகம் ஆயுதக் குழுவின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் குறித்த பகுதியில் அரசாங்கப் படைகள் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் வலியுறுத்தியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad