பாராளுமன்றத்தில் எம்.பிக்களை சந்திக்க பொதுமக்களுக்கு மீண்டும் வாய்ப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 14, 2021

பாராளுமன்றத்தில் எம்.பிக்களை சந்திக்க பொதுமக்களுக்கு மீண்டும் வாய்ப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து தமது பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக சபை முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதற்கட்டமாக அதற்கென 10 அறைகள் ஒதுக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் எவ்வாறெனினும் அதற்காக ஏழு அறைகளை ஒதுக்க முடியும் என பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு பிரதம படைக்கல சேவிதர் அறிவித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

பாராளுமன்றத்தில் எம்.பிக்களை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்புகள் கொரோனா வைரஸ் சூழ்நிலை ஆரம்பகட்டத்தில் முழுமையாக தடைசெய்யப்பட்டது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad