புதன்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

புதன்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளை எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்ளும் வகையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை (14) முதல் அத்தியவாசிய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக மாத்திரம், பொதுப் போக்குவரத்து சேவையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 பரவல் காரணமாக, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக, நேற்று முன்தினம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல் கோவையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad