ஜோ பைடனை எச்சரித்தார் ஆப்கான் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

ஜோ பைடனை எச்சரித்தார் ஆப்கான் ஜனாதிபதி

அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவது இரு தரப்பினருக்கும் விளைவுகளை ஏற்படுத்தும், ஆனால் அவர்களை திரும்பப் பெறுவதை தாமதப்படுத்துமாறு தான் கேட்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை எச்சரித்தார்.

"ஜனாதிபதி பைடனின் முடிவு ஒரு மாறத்தக்க முடிவாகும், இது ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கும் விளைவுகளை ஏற்படுத்தும்" என்று வாஷிங்டனில் கருத்து தெரிவித்தபோது கானி கூறினார்.

அமெரிக்காவுடனான கலந்துரையாடல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன என்றும், பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை ஆட்சியில் இருக்க பலமாக இருக்க வேண்டும், என்றும் கானி மேலும் கூறினார். 

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்பதை பைடன் தெளிவுபடுத்தியுள்ளார் என்று அவர் கூறினார்.

தெற்கு மற்றும் வடக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு விழுந்த பல மாவட்டங்களை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் திரும்பப் பெற்றுள்ளதாக மேலும், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அறிவித்தார். கானி ஒரு போர் நிறுத்தம் மற்றும் அரசியல் செயல்முறைக்கு திரும்புமாறு தலிபான்களுக்கு அழைப்பு விடுத்தார்.

"ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அமெரிக்கா திரும்பப் பெற்ற பின்னர் உருவாகும் விளைவுகளை நிர்வகிக்க வேண்டும், ஆப்கானிய மக்கள் மீளெழ வேண்டும்" என்று அவர் கூறினார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னர் அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருவதால் பைடனும் கானியும் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். 

அமெரிக்கா ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படையினரில் பாதிக்கும் மேற்பட்டவர்களை திரும்பப் பெற்றுள்ளது, மேலும் செப்டம்பர் மாத காலக்கெடுவுக்கு முன்னதாகவே ஜூலை மாதத்திற்குள் பெரும்பாலும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறது.

துருப்புக்கள் திரும்பப் பெறும் அதேவேளை தெற்காசிய நாடுகளுக்கு உதவி வழங்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை அறிவித்தது, இதில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தடுப்பூசியின் மூன்று மில்லியன் டோஸ் வழங்கப்பட்டது.

செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களின் 20 வது ஆண்டுவிழாவிற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது இறுதிப் படையினரை திரும்பப் பெறுவதாகவும், அதன் வெளியேற்றத்தை நிறைவு செய்வதாகவும் பைடன் முன்னர் அறிவித்திருந்தார்

No comments:

Post a Comment