திபெத்திய துருப்புக்களுக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கும் சீனா - News View

About Us

About Us

Breaking

Monday, July 12, 2021

திபெத்திய துருப்புக்களுக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கும் சீனா

சீன இராணுவத்தின் திபெத்திய துருப்புக்களுக்கு சிறப்பு நடவடிக்கைகளுக்காக பயிற்சிகள் மற்றும் கூட்டு பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சீனாவுக்காக சேவை செய்வதற்கான தேவை மற்றும் விசுவாசத்தை மையப்படுத்தியதாக இந்த பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய சிறப்பு எல்லைப் படை போன்ற ஒரு வலுவான படையணியை உருவாக்குவதே இவ்வாறான பயிற்சிகளின் நோக்கம் என்பதுடன் திபெத்தியர்கள் எல்லை பாதுகாப்பு மற்றும் மலைப் போர் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால் சீனா தனக்கு சாதகமாக இவர்களை பயன்படுத்துகின்றது.

சீன இராணுவத்தின் திபெத்திய துருப்புக்கள் சிறப்பு நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் பயிற்சியளிக்கப்படுகின்றன. மேலும் திபெத்தியர்களை தங்கள் படைகளில் இணைத்துக் கொள்ள சீனா முயற்சித்து வருகின்றது. ஆனால் திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தில் பெரும்பான்மையான மக்கள் சீன அடக்குமுறைக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளனர். மறுபுறம் தலாய்லாமாவைப் பின்பற்றுபவர்கள் அதிகம் என்பதால் சீனாவின் எதிர்பார்ப்புகளுக்கு சவாலாகின்றது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாத காலப்பகுதியிலிருந்து இந்தியாவும் சீனாவும் எல்லைகளில் முரண்பாடுகளுடன் உள்ளன. நெருக்கடிகளுக்கு இன்னும் தீர்வுகளும் காணவில்லை. இவ்வாறானதொரு நிலையில் திபெத்தியர்களை உள்வாங்க சீனா முயற்சிப்பது பல்வேறு நெருக்கடிகளுக்கு காரணமாகவும் அமையலாம்.

No comments:

Post a Comment