தளர்த்தப்படுகிறது மருதமுனை தனிமைப்படுத்தல் - News View

Breaking

Post Top Ad

Friday, July 16, 2021

தளர்த்தப்படுகிறது மருதமுனை தனிமைப்படுத்தல்

(சர்ஜுன் லாபீர்)

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கடந்த 3ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட மருதமுனை-03 கிராம சேகவர் பிரிவு நாளை (17) காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி தெரிவித்தார்.

மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவினை விடுவிப்பது சம்மந்தமாக இன்று (16) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரையின் பெயரில் தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அஸ்மி தலைமையில் நடைபெற்ற
உயர் மட்டக் கூட்டத்தில் மேற்படி பரிந்துரைக்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்ட நிலைமை நாளை காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டாலும் தொடர்ந்தும் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இவ் உயர் மட்டக் கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர், பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மருதமுனை உலமா சபை பிரதிநிதிகள், மருதமுனை வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad